உள்ளூர் செய்திகள்

பத்து கேள்விகள் - பளிச் பதில்கள்

ஹெபடைடிஸ் ஏ மற்றும் ஈ வைரஸ் என்பது என்ன?கல்லீரலை பாதிக்கும் நோய் அறிகுறியே ஹெபடைடிஸ் ஏ மற்றும் ஈ எனும் மஞ்சள் காமாலை. ஹெபடைடிஸ் ஏ, ஈ வைரஸ் வரக்காரணம்?நோய்த் தொற்று கல்லீரலை தாக்கும்போது, ஹெபடைடிஸ் வருகிறது என்றாலும், மது, நீண்ட நாட்களாக சாப்பிடும் மாத்திரைகள், அதிக கொழுப்பு படிவது போன்ற பல காரணங்களால் இது வருகிறது. ஹெபடைடிஸ் வைரஸ்களில் ஏ, பி, சி, டி, ஈ., என, பல வகைகள் உள்ளன.இந்நோய் எவ்வாறு பரவுகிறது?சுகாதாரமற்ற சூழலில் சாப்பிடும் உணவு, பாதுகாப்பற்ற குடிநீர் மூலம் பரவுகிறது.இதன் அறிகுறிகள் ஏன்ன?பசியின்மை, காய்ச்சல், வாந்தி, களைப்பு ஏற்படும். இதோடு வயிற்றுவலி, தோல், கண்கள், நகங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.இப்பாதிப்பின்போது கண், தோல் ஏன் மஞ்சள் நிறமாக மாறுகிறது?மஞ்சள் நிறத்தில் பிலிருபின் (Bilirubin) என்ற ஒரு நிறமிப் பொருளை கல்லீரல் சுரக்கிறது. சாதாரணமாக, இதன் அளவு ஒரு டெசிலிட்டர் ரத்தத்தில் 0.8 மி.கி., என்ற அளவில் இருக்கும். கல்லீரல் பாதிக்கப்படும்போது, இந்தச் சுரப்பு அதிகரிப்பதால்,ரத்தத்தில் இதன் அளவு அதிகரித்து, சிறுநீர், தோல், கண்கள், நகங்கள் ஆகியவை மஞ்சள் நிறத்துக்கு மாறும்.ஹெபடைடிஸ் ஏ விற்கு தடுப்பூசி உள்ளதா?ஹெபடைடிஸ் ஏ விற்கு, தடுப்பூசி உள்ளது. ஹெபடைடிஸ் ஈக்கு தடுப்பூசி இல்லையென்றாலும், சிகிச்சை உண்டு.ஹெபடைடிஸ் ஏ தடுப்பூசியை எந்த வயதில் போட்டுக் கொள்ள வேண்டும்?இத்தடுப்பூசி ஓராண்டுக்கு மட்டுமே பலன் தரும் என்பதால், ஆண்டுக்கு ஒரு முறை, எல்லா வயதினரும் இத்தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம்.ஹெபடைடிஸ் ஏ, ஈ பாதிப்பை தடுக்க உதவும் வழிமுறைகள் என்ன?சுகாதாரமான சூழலில் தயாரான உணவை மட்டும் சாப்பிடுவது; சுத்தமான நீரைக் குடிப்பது; சுய சுகாதாரத்தை கடைபிடிப்பது. இவை தவிர, கொழுப்பு நிறைந்த உணவை தவிர்ப்பது. யார் யாருக்கெல்லாம் இப்பாதிப்பு வரும்?சுகாதாரமற்ற சூழலில் வசிக்கும் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.இப்பாதிப்பிற்கு சிகிச்சை முறைகள் என்னென்ன?ஹெபடைடிஸ் ஏ பாதிப்பிற்கு, மருந்து கிடையாது. இந்த வைரஸை நம் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியே அழித்துவிடும் என்பதால், குணமடைய இரண்டு வாரங்கள் ஆகும். கர்ப்பிணிகளுக்கு ஹெபடைடிஸ் ஈ பாதிப்பு ஏற்பட்டால், உயிருக்கே ஆபத்தாய் முடியும்.செ. ஜாய் வர்கீஸ் கல்லீரல் சிறப்பு நிபுணர்.குளோபல் ஹெல்த் சிட்டிசென்னை.95660 62200


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !