உள்ளூர் செய்திகள்

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

1எலும்புகளின் அமைப்பு எவ்வாறு இருக்கும்?உடலில் உள்ள, எலும்புகள் இணையும் இடத்தை, மூட்டு என அழைப்பர். ஒவ்வொரு மூட்டின் இணைப்பையும் மூடி இருக்கும் சவ்வு போன்ற அமைப்பு, குருத்தெலும்பு எனப்படும். இது, குஷன் ஆகவும், அதிர்ச்சியை தாங்கும் அமைப்பாகவும் செயல்படுவதால், எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உரசி, தேயாமலும், சேதமடையாமலும் பாதுகாக்கப்படுகிறது. இவ்வாறு தான், எலும்புகளின் அமைப்பு இருக்கும்.2 எலும்புகளில் வலியும், வீக்கமும் உண்டாக காரணம் என்ன?பொதுவாக எலும்புகளில் ஏற்படும், அதிகப்படியான அழுத்தத்தினாலும், இணைப்புகளில் ஏற்படும் வியாதிகளாலும், குருத்தெலும்பு உலர்வதோடு, வலியும் வீக்கமும் உண்டாகிறது. 3 முடக்குவாதம் உண்டாக காரணம் என்ன?முடக்கு வாதத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. எனினும், அதிகப்படியான உடல் எடை, குரோமோசோம்களில் ஏற்படும் மாறுதல்கள் மற்றும் பிரச்னைகள், குருத்தெலும்பு திசுக்களில் ஏற்படும் அழுத்தம் ஆகியவை முடக்கு வாதத்திற்கான முக்கிய காரணிகளாக அமைகின்றன. பொதுவாக, விரல்களின் இணைப்புகள், கட்டை விரலின் அடிப்பகுதியான மூட்டில் ஏற்படும் வீக்கம், விறைப்பு தன்மை போன்றவையே காரணமாக அமைகின்றன.4முடக்குவாதத்திற்கான அறிகுறிகள்?உடல் சார்ந்த செயல்களால் ஏற்படும் வலிகள், பளு தூக்குதல், சுளுக்கு, இவை மூட்டுகளை முறுக்குவதால், எலும்புகளை இணைக்கும் தசைநார்களில் ஏற்படும் கிழிசல்கள், மூட்டுகளின் இயல்பான செயல்பாட்டை தடுக்கின்றன. இதனால் மாடிப்படி ஏறும் போது, தட்டச்சு செய்யும் போது அதிகபடியான அழுத்தத்தை மூட்டுகளுக்கு கொடுத்து, மூட்டுவலியை உண்டாக்குகின்றன. இதுவே அறிகுறிகள்.5 அதிகப்படியான எடை, முடக்குவாதத்தை ஏற்படுத்துமா?உடலின் எடையை தாங்கும் முக்கிய இணைப்புகளான இடுப்பு மற்றும் மூட்டு எலும்புகள், அதிகப்படியான எடையால், தேய்மானத்திற்கு உள்ளாகி, முடக்குவாதத்தை ஏற்படுத்துகின்றன.6 யாரெல்லாம் முடக்குவாதத்தினால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்?பெண்கள் மற்றும் வயதானோர் முடக்குவாதத்தினால், அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 7 முடக்குவாதத்தை கண்டறிய பரிசோதனைகள் உள்ளனவா?'எக்ஸ் - ரே' மற்றும் 'எம்.ஆர்.ஐ., ஸ்கேன்' முடக்குவாத காரணி பரிசோதனை, உடல்நோய் எதிர்ப்பு பரிசோதனை, புரதப் பரிசோதனை உள்ளிட்ட பல பரிசோதனைகள் உள்ளன.8 முடக்குவாதத்திற்கான சிகிச்சைகள் என்னென்ன உள்ளன?குருத்தெலும்பு தேய்மானத்தினால் ஏற்படும் முடக்குவாதத்திற்கு தீர்வு காண்பது சிரமமானது என்றாலும், அதனால் ஏற்படும் விளைவுகளை, சிகிச்சைகள் மூலம் தவிர்க்கலாம்.முதல்நிலையாக மருந்துகள், முடக்கியல் பயிற்சிகள் மூலம் தீர்வு காணலாம். பின் அறுவை சிகிச்சைகள், வாழ்வியல் மாற்றங்கள், போதுமான ஓய்வு போன்றவை மூலம் தீர்வு காண முடியும். 9 முடக்குவாதத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு, எப்போது சிகிச்சை தேவைப்படும்?மூட்டுகளில் தாங்க முடியாத வலி ஏற்படும் போதும், மூட்டுகளை சுற்றியுள்ள இடங்களில், வீக்கம் அல்லது சிவப்பு நிறத்தில் நிற மாற்றம் அடைந்திருந்தாலோ, மென்தன்மை அற்று இறுகியிருந்தாலோ அல்லது வலி மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தாலோ, மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சைகள் தேவைப்படும். 10முடக்குவாதத்திற்கு அறுவை சிகிச்சை தீர்வாகுமா?முதலில், முடக்குவாதத்திற்கு நிரந்தர தீர்வு உண்டு, என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அன்றாட செயல்களை பாதிக்கும் அளவிற்கு, வலி அதிகமானால், அறுவை சிகிச்சை அவசியமாகிறது. 1970களிலேயே இவ்வாறான அறுவை சிகிச்சைகள், திறமையான மருத்துவர்களால் செய்யப்பட்டுள்ளன. அறுவை சிகிச்சைக்கு, ஏழு முதல் 10 நாட்கள் வரை, மருத்துவமனையில் தங்க நேரிடும். அறுவை சிகிச்சைக்கு பின், வலியில்லா ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம்.- சி.ஜெ.வெற்றிவேல், எலும்பு நிபுணர்,பிவெல் மருத்துவமனை,தி.நகர், சென்னை.98411 08873 தீதீதீ.ஞஞுதீஞுடூடூடணிண்ணீடிtச்டூண்.ணஞுt


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்