உள்ளூர் செய்திகள்

என் இதயத்தில் கோளாறு இல்லை; இனியும் வராது!

எனக்கு 61 வயதாகிறது. 30 ஆண்டுகளுக்கு முன், எப்படி சுறுசுறுப்பாக மருத்துவப் பணிகளை செய்தேனோ, அப்படியே இன்றும் தொடர்கிறேன். காரணம், இளம் வயதில் தற்காப்பு கலைகள், தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகளை தினமும் செய்தேன். இப்போது, தினசரி யோகா செய்கிறேன்; மகிழ்ச்சியாக இருக்கிறேன். பெரும்பாலானவர்களை போல இருக்கும் மன அழுத்தம் எனக்கு கிடையாது.எனக்கு விருப்பமில்லை என்றாலும், 10 ஆண்டுகளுக்கு முன் மனைவியின் வற்புறுத்தலால் இதயத்தின் ஆரோக்கியத்தை தெரிந்து கொள்ள, ஒரே ஒரு முறை சி.டி., 'ஸ்கேன்' செய்தேன். ஒருவருக்கு வாழ்நாளில் ஒரு முறை இதை செய்தால் போதும்.எனக்கு இதயத்தில் எந்த கோளாறும் இல்லை; இனி வரவும் வராது. அடுத்த 10 ஆண்டுகள் கழித்து, இதயத்தில் எந்த பிரச்னையும் வராமல் தடுக்க, தேவையான மருத்துவ பரிசோதனைகளை தேவைக்கேற்ப செய்து கொள்கிறேன்.டாக்டர் தேவி ஷெட்டி, இதய நோய் சிறப்பு மருத்துவர், பெங்களூரு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !