சுவாசக் கோளாறுகளை தவிர்க்க...
சுதீஷ், சென்னை: சுவாசக் கோளாறைத் தவிர்க்க என்ன செய்யலாம்?வீட்டைச் சுத்தமாய் வைத்துக் கொள்வது, சமையலறையில் புகை போக்கியைப் பயன்படுத்துவது, 'ஏசி' இருந்தால், அதன் தூசி வடிகட்டியை, வாரம் ஒரு முறை சுத்தம் செய்வது, வெளியில், கால் நடையாகவோ, இருசக்கர வாகனத்திலோ செல்லும்போது, மூக்கு மூடியைப் பயன்படுத்துவது, காரில், 'ஏசி'க்கான காற்று சுழற்சி முறையைப் பயன்படுத்துவது ஆகியவை, சுவாசக் கோளாறுகளைத் தவிர்க்க உதவும்.