ரத்த அழுத்தத்தை குறைக்க
* தினமும் உணவில் 5 கிராம் உப்பு போதுமானது. ஊறுகாய், கருவாடு, வடகம், அப்பளத்தை தவிர்க்க வேண்டும்.* காபி, டீயை குறைக்க வேண்டும்.* இறைச்சி, முட்டை, தயிர், நெய், வெண்ணெய், பாலாடை, ஐஸ்கிரீம், பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும். * பழம், காய்கறி, கீரைகளை சேர்க்க வேண்டும். * உயரத்திற்கேற்ப உடல் எடை இருக்க வேண்டும்.* மது, புகையை தவிர்க்க வேண்டும்.* தினமும் ஒரு மணி நேரம் "வாக்கிங்' செல்ல வேண்டும்.* யோகா, தியானம் செய்யலாம்.* வாரம் ஒருமுறை ரத்தஅழுத்த பரிசோதனை செய்ய வேண்டும்.