உள்ளூர் செய்திகள்

தக்காளி, உருளைக் கிழங்கை பூசினால் வரும் விளைவு!

அழகாக வேண்டும் என்ற எண்ணம், எல்லா பெண்களிடமும் உள்ளது. என்ன செய்தால் நாம் நினைத்தபடி அழகாகலாம் என்ற மனநிலையில் தான் பெரும்பாலும் இருக்கின்றனர். எதை எதையோ வாங்கி பூசுகின்றனர்.தோல் வெளுக்கும் என்று சொல்லி தரப்படும் கிரீம்களில், 'ஸ்டிராய்டு' மருந்துகள் கலந்திருக்கும். பயன்படுத்த ஆரம்பித்த சில நாட்களிலேயே தோல், 'பளிச்'சென்று தெரியும்.'பரவாயில்லை... நல்ல வெள்ளையாயிட்டோம்' என்று நினைத்து, முதலில் வாங்கிய கிரீம் தீரும் வரை பயன்படுத்தி விட்டு, அதன்பின் போதும் என்று விட்டு விடுவர். இப்படி செய்வதால், முதலில் இருந்த பழைய நிலைக்கே தோல் வந்து, இயல்பாக தோல் இருந்த நிறத்தைக் காட்டிலும், அடர்த்தி அதிகமாகி கறுத்து விடும். இன்னொரு பக்கம், ஸ்டிராய்டு கலந்த கிரீம்களை தொடர்ந்து பயன்படுத்தினால், தோல் மெலிதாக மாறிவிடும். முகத்திற்கு ரத்த ஓட்டத்தை தரும் நரம்புகள் அனைத்தும் தெரிய ஆரம்பிக்கும்.முகத்தைப் பார்த்தால் முகம் அப்படியே சிவந்து இருக்கும். அவர்கள் நல்ல நிறமாகி விட்டோம் என்று நினைப்பர்; உண்மையில் அது நிறம் அடைந்ததற்கான அடையாளம் இல்லை. தோல் மென்மையானதால், ரத்த நாளங்கள் வெளியில் தெரிய ஆரம்பித்து விட்டது; இது, ஸ்டிராய்டு மருந்தின் பக்க விளைவு.இதனால், சிலருக்கு பருக்கள் அதிகமாக வர ஆரம்பிக்கும். தேவையில்லாத முடிகள் முகத்தில் வளரும். 'யு டியூபிலங்' அழகு என்ற பெயரில் தக்காளி, உருளைக் கிழங்கு என்று சாப்பிடும் பொருட்களை முகத்தில் பூச சொல்லி அறிவுறுத்துகின்றனர்; இதுவே பல நேரங்களில் அலர்ஜியை ஏற்படுத்தும்.தினமும் காய்கறிகள், பழங்கள் சாப்பிட்டு, தேவையான அளவு தண்ணீர் குடித்து, தோலை ஈரப்பதத்துடன் வைத்துக் கொண்டாலே, தோல் ஆரோக்கியமாக இருக்கும்.டாக்டர் ஜெயலட்சுமிதோல் மருத்துவர், மதுரை. சென்னை. 94877 81175


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !