ஜானுசிரசாசனம்
பொருள்: ஜானு முழங்கால்; முழங்கால் பிரச்னைகளை சரிசெய்து பலப்படுத்துவதால் இந்த பெயர் பெற்றது.செய்முறை:* விரிப்பில் உட்கார்ந்து, இரண்டு கால்களையும் நேராக நீட்டவும் * இடது காலை மடக்கி, வலது தொடையை ஒட்டியவாறு, கீழே வைக்கவும் * இப்போது இரு கைகளையும் நமஸ்கார நிலைக்கு கொண்டு வந்து, மூச்சை இழுத்துக் கொண்டே கைகளை மேலே உயர்த்தி, மெதுவாக மூச்சை வெளிவிட்டுக் கொண்டே குனிந்து, கை விரல்களால் கால் விரல்களை பிடித்து, நெற்றிப் பகுதி வலது மூட்டில் படுமாறு செய்யவும். இதில் கால் மூட்டு பகுதியை உயர்த்தக் கூடாது. முழங்கை தரையில் பட வேண்டும். * சிறிது ஆழ்ந்த சுவாசத்திற்கு பின் கைகளை விடுவித்து, சாதாரண நிலைக்கு வரவும். இதேபோல் இடது பக்கம் செய்யவும்.பலன்கள்:1. தொடையில் அதிகப்படியான சதைகள் குறையும்2. கால்களில் நரம்பு சுருள், பிடிப்பு, மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீரும்3. தட்டைக்கால் பிரச்னை உள்ளோர், இதை செய்து பலன் பெறலாம் 4. அடிவயிற்று தசைகள் இறுக்கப்படுவதால், வயிற்று உள் உறுப்புகளின் பணி சீராகும்.குறிப்பு:பலவந்தமாக செய்ய வேண்டாம்; மெதுவாக பழக, பழக எளிமையாகி விடும். முதுகு வலி உள்ளோர் யோகாசன ஆசிரியர்களின் அறிவுரையோடு செய்ய வேண்டும். ரா.சுதாகர், திருமூலர் பிரபஞ்ச யோகா மையம், சென்னை.97909 11053