நாங்க இப்படிதானுங்க! - சாப்பிடுவதற்காகவே நடப்பேன்!
எனக்கு நன்றாக, அழகாக டிரஸ் செய்து கொள்ளப் பிடிக்கும். நன்றாக சாப்பிடவும் பிடிக்கும். அழகாக இருக்க வேண்டும் என்ற விருப்பமும் உண்டு. எனவே, என் லைப் ஸ்டைலை எல்லாம் இணைந்ததாக மாற்றிக் கொண்டேன். காலையில் தினமும், 4:30 மணிக்கு எழுந்து விடுவேன். அடுத்த ஒரு மணி நேரம், மருத்துவ மாணவிகளான என் இரண்டு பெண்களுக்கும், உணவு தயாரிக்கும் வேலை. அடுத்து, ஒரு மணி நேரம் நடைப் பயிற்சி செய்வேன்.எல்லாரும் என்னிடம் கேட்பது, 'இவ்வளவு வேகமாக எப்படி உங்களால் நடக்க முடிகிறது?' என்று தான். வேகமாக நடந்தால், இரண்டு வாய் அதிகம் சாப்பிடலாமே என்ற நினைப்பில் நடப்பேன். நடைப்பயிற்சி முடித்து, வீட்டில் சில உடற்பயிற்சிகளையும் செய்வேன். அதன்பின், என் தினசரி பணிகள் ஆரம்பிக்கும்.'குக்கிங்' ரொம்ப பிடிக்கும். எந்த உணவாக இருந்தாலும், மிக நன்றாக சமைப்பேன். ஒரு சட்னி அரைத்தாலும், எப்படி அரைக்கணும், அதில் என்னென்ன போடணும் என்று கவனித்து செய்வேன். ஒரு உணவை, 10 முறை செய்தாலும், ருசி மாறாமல், முதல் முறை செய்தது போலவே செய்வேன். எனவே, 'டயட்' என்ற பேச்செல்லாம் கிடையாது. மூன்று வேளையும் நானே சமைத்த, சரியான உணவை, நேரத்திற்கு சாப்பிட்டு விடுவேன்.காய்கறி நறுக்குவது, உணவின் நிறம் மாறாமல் இருப்பது என்று, சிறிய விஷயத்தில்லும் கவனமாக இருப்பேன். வீட்டை ஒழுங்காக, அழகாக பராமரிப்பேன். படுக்கை விரிப்பில் லேசான கசங்கல் கூட இருக்காது. எதிலும் ஓழுங்கை கடைப்பிடிக்க வேண்டும்.சொல்லிக் கொடுப்பதை விட, நம்மை பார்த்தே குழந்தைகள் கற்றுக் கொள்கின்றனர்.சரண்யா பொன்வண்ணன், நடிகை.