உள்ளூர் செய்திகள்

நாங்க இப்படிதானுங்க! மூளையை பழக்கி விட்டேன்!

பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடியவர், வாசிம் அக்ரம். உலகின் தலை சிறந்த, இடது கை பந்து வீச்சாளர்களில் ஒருவர். கிரிக்கெட்டை காட்டிலும், அதிகம் போராடுவது, நீரிழிவை கட்டுப்பாட்டில் வைப்பதற்கு தான். கிரிக்கெட் விளையாட்டில், சாதனைகளின் உச்சத்தில் இருந்த, 1997ம் ஆண்டில்... அவரின், 29வது வயதில், நீரிழிவு பிரச்னை இருப்பது தெரிந்தது. 'அவ்வளவு தான்... என் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்தது என, நினைத்தேன். இந்த உண்மையை, ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. தினமும், மூன்று வேளையும் இன்சுலின் போட்டுக் கொள்ள வேண்டும். நீரிழிவிற்காகவே, என் உணவு, உடற்பயிற்சி என, மொத்த வாழ்க்கை முறையையும் மாற்றிக் கொள்ள வேண்டி இருந்தது.'துவக்கத்தில், இதெல்லாம் மிகுந்த வெறுப்பாக இருந்தது. அந்த சமயத்தில், எனக்கு வேண்டிய மன வலிமையை, என் மனைவி தான் கொடுத்தார். 'தினமும், இரவில் வழக்கம் போல பிரியாணி சாப்பிட வேண்டும் என, தோன்றும்; ஆனால், சிரமப்பட்டு தவிர்ப்பேன்.'நீரிழிவை கட்டுப்பாட்டில் வைத்தால் தான், கிரிக்கெட் என்ற உண்மை உரைத்த போது, அதற்கேற்ப, என் மூளையை, 'புரோகிராம்' செய்து விட்டேன். இப்போது, ஆரோக்கியமாக உணர்கிறேன்.'- வாசிம் அக்ரம், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !