உள்ளூர் செய்திகள்

பி.டி.ஏ., என்றால் என்ன?

கருணாகரன், தென்காசி: என் 11 வயது மகளுக்கு, 'எக்கோ' பரிசோதனையில், பி.டி.ஏ., என வந்துள்ளது. இது என்ன வியாதி, நான் என்ன செய்ய வேண்டும்?பி.டி.ஏ., என்பது, Patent Ductus Arteriosus என்பதன் சுருக்கம். இது பிறவியில் இருந்தே இதயத்தில் இருக்கும் ஒரு ஓட்டையைக் குறிக்கிறது. இந்நோயை கண்டு அஞ்சத் தேவையில்லை. தற்போது நவீன சிகிச்சையாக, அறுவை சிகிச்சையின்றி, Coil closure முறையில் எளிதில் மூட முடியும். உங்கள் மகளுடன், இதய டாக்டரிடம் சென்று, பரிசோதனை செய்து, சிகிச்சை பெற்றுக் கொள்ளவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !