உதட்டில் அடிபட்டால் என்ன செய்வது?
கே.கயல்விழி, சிவகங்கை: ஆறு மாதங்களுக்கு முன்பு என்னுடைய இடது குதிகாலில் கடுமையான வலி இருந்தது. மருத்துவரிடம் ஆலோசித்த பொழுது, அவர் ஒரு இன்ஜெக்ஷன் போட்டார். அதன் பிறகு எனக்கு வலி இல்லை. ஆனால் தற்பொழுது வலி திரும்ப வந்துள்ளது. இந்த வலி நிரந்தரமாக குணமாக ஏதாவது வழியுள்ளதா? குதிகால் பகுதியில் உள்ள இரண்டு எலும்புகள் இணையும் பகுதியில் ஏற்படும் உராய்வினால், இந்த வலி ஏற்படுகிறது. தொடர்ந்து இந்த எலும்புகள் உராய்வதால், அந்த இடத்தில் புதிதாக எலும்பு தோன்றும். உங்களுக்கு போடப்பட்ட ஊசி சிறிது காலத்திற்கு உங்களின் வலியை குறைக்கும். மாறாக வலியை சுத்தமாக நீக்க இரண்டு அல்லது மூன்று ஊசி போட வேண்டியதிருக்கும்.மறுபடியும் வலி வராமல் தடுக்க:* காலை மற்றும் இரவு நேரங்களில் பாதங்களை சுடுதண்ணீரில் சிறிது நேரம் வைக்கலாம்.* உடல் எடையை சரியாக பராமரிக்க வேண்டும்.* வெறுங்காலில் நடப்பதை தவிர்க்க வேண்டும்.* காலுக்கு இதமான செருப்புகளை அணிய வேண்டும்.* உடற்பயிற்சி அவசியம் (குதிகால்களையும், கால் விரல்களையும் மாற்றி மாற்றி செய்வது நல்லது).* புதிதாக எலும்பு வளர்ந்தால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.எஸ்.மரகதம், கோபிசெட்டி பாளையம்:என்னுடைய பேரன் விளையாடும் போது அடிக்கடி கீழே விழுந்து உதட்டில் அடிபடுகிறது... என்ன செய்வது?உதட்டிலோ, நாக்கிலோ அடிபட்டால் ரத்தம் அதிக மாக வரும். அடிபட்டால் உடனடியாக ஐஸ் துண்டு களை ஒரு பிளாஸ்டிக் பையில் சுற்றி, அந்த இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதன் மூலம் ரத்தம் வருவது நின்று விடும். பிறகு காயம் எந்த அளவிற்கு ஏற்பட்டுள்ளது என்று பார்க்கலாம். காயம் சிறியளவில் இருந்தால், சிறிதளவு சர்க்கரை கொடுக்க வேண்டும்.உமிழ்நீரில் இயற்கையாக உள்ள காரணிகள், காயத்தை 4 - 5 நாட்களில் குணப்படுத்தி விடும். காயம் ஆழமாகவும், காயத்தில் மண், உணவுத் துகள்கள் அல்லது உடைந்த பல் போன்றவை இருந்தால், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மருத்துவரை அணுகுவது நல்லது.நேரம் கடத்தினால் காயத்தில் எரிச்சல் ஏற்படும். வீக்கம் ஏற்பட்டு விடும். கெட்ட வாடை ஏற்பட்டால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.ஆழமான காயத்தை வீட்டிலேயே சுத்தம் செய்ய வேண்டுமென்றால், 'ஐ டிராப்சை' உபயோகப்படுத் தலாம். மற்ற ஆன்டிசெப்டிக் மருந்துகளை உபயோகிக்கக் கூடாது.க.அம்பிகா, கடலூர்:குழந்தைக்கு எப்போதிலிருந்து பல் துலக்க வேண்டும்? இதற்கு எதை உபயோகிக்கலாம்?பல் முளைத்த உடனேயே, தினமும் காலையும், மாலை யும் பல் துலக்க வேண்டும். மென்மையான பிரஷ் உப யோகிக்க வேண்டும்.புளோரைடு கலந்த பற் பசையை பயன்படுத்த வேண்டும். குழந்தையின் 7 - 8 வயது வரை, பல் துலக்கு வதை பெரியவர்கள் கண் காணிக்க வேண்டும்.- டாக்டர் கீதா மத்தாய், குழந்தை நல மருத்துவர், வேலூர்.