உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / நிஜக்கதை / என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே!

என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே!

வறுமை, பிழைப்பு பிரச்சனை, மற்றும் தற்காலிக வாழ்விடம் இன்றி தவிக்கும் பலருக்கும், இரவு நேரத்தில் பாதுகாப்பாகத் தங்க துாங்க ஒரு சிறிய இடமே பெரும் நிம்மதியாகிறது. இந்த பின்னணியில், புதுதில்லி நகர சீரமைப்பு விடுதி வாரியம் (DUSIB) செயல்படுத்தும் இரவு தங்குமிடங்கள், நகரின் பல பகுதிகளில் மனத்தளர்ச்சி அடைந்த மக்களுக்கு ஒளியாக உள்ளது.அந்த வகையில், சரை காலே கான் பகுதியில் செயல்பட்டு வரும் இரவு தங்குமிடம், சாலையோரங்களில் தங்கி வரும் பெண்கள், முதியவர்கள், பிழைப்புக்காக நகரம் தேடிவந்தவர்கள் போன்றவர்களுக்கு பாதுகாப்பான, சுத்தமான, இலவச தங்குமிடமாக திகழ்கிறது.இலவச படுக்கை மற்றும் படுக்கையறை,தூய்மையான குளியல் மற்றும் கழிப்பறை வசதிகள்,தண்ணீர் மற்றும் அடிப்படை மருத்துவ உதவி,சுற்றுலா அல்லது வேலை தேடி வருவோருக்கும் தற்காலிக தங்கும் இடம்,இதற்கு பயனாளர்களாக இருப்பவர்கள்,நகரத்தில் ஒரு இடத்தை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லாமல், குறைந்தபட்சமாக ஒரு இரவாவது தூங்க முடிகிறது.சிலருக்கு இது வாழ்க்கையின் ஒரு இடைநிலை, வேலை வாய்ப்பு கிடைக்கும் வரை. சிலருக்கு, சாலையோர வாழ்வின் வலிகளை ஓரளவு மறக்கும் இடம்.DUSIB நிர்வாகம், தில்லியின் பல பகுதிகளில் ஏற்கனவே இது போன்ற இரவு தங்குமிடங்களை நிர்வகிக்கிறது.சிலைமான் ரோட், யமுனா பங்க், காச்மீரி கேட், சரை காலே கான் போன்ற பகுதிகளில் இந்த திட்டங்கள் நகரத்தை மனிதநேயம் மிக்க நகரமாக மாற்றும் நோக்கில் செயல்படுகின்றன.அதிகரிக்கும் நகர்மயமாக்கல், அகதிகள், வேலை தேடிப் புறநகரிலிருந்து வரும் பொதுமக்கள் ஆகியோருக்கான தேவையை கருத்தில் கொண்டால், இத்தகைய தங்குமிடங்களை மேலும் அதிகரிக்க வேண்டியது காலத்தின் தேவை.புதிய வீடு இல்லை என்றாலும், ஒரு இரவுக்கு நிம்மதி வேண்டும். சாப்பாடு இல்லை என்றாலும் ஒரு படுக்கை வேண்டுமென்பது மனிதத்தின் அடிப்படை உரிமை. சரை காலே கான் இரவு தங்குமிடம், அந்த உரிமையை குறைந்தபட்சமாகக் கொண்டுவரும் சமூக நலத்தின் உணர்வுச் சின்னமாக உள்ளது.-எல்.முருகராஜ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

KRISHNAN R
ஆக 10, 2025 19:40

மிக நன்று


sridhar
ஜூன் 27, 2025 13:41

ரொம்ப நல்ல திட்டம் . நிர்கதியாக இருப்பவர்களுக்கு நல்ல புகலிடம். நன்றாக நடக்க வேண்டும்.


Shivshankar
ஜூன் 27, 2025 10:40

இது மிக முக்கிய மற்றும் பயனுள்ள திட்டம். எத்தனையோ நாட்கள் நான் யோசித்திருக்கிறேன். சாப்பாடு கூட எங்கேயாவது இலவசமாய் கிடைத்து விடுகிறது. பாதுகாப்பானமற்றும் சுகாதாரமான தங்கும் வசதி எத்தனைப் பேருக்கு தேவைப்படுகிறது தினமும். அரசோ, தன்னார்வ தொண்டு நிறுவனங்களோ எல்லா முக்கிய ஊர்களிலும் இத்தகைய சேவைத் தொடங்கினால் மிக பயனுள்ளதாய் இருக்கும்.


s_raju
ஜூன் 27, 2025 00:49

தமிழ் நாடும் இது போன்ற வசதிகளை செய்யலாமே


முக்கிய வீடியோ