உள்ளூர் செய்திகள்

தினமும் 16 கோடி லிட்டர் குடிநீர் வீண்

'மார்க்கெட் சாபியென்ஸ்' என்ற சந்தையியல் ஆய்வு நிறுவனமும், ஒரு வட இந்திய பத்திரிகையும் இணைந்து, நமது நாட்டின் 15 முக்கிய நகரங்களில் உள்ள ஓட்டல்களில் குடிநீர் பற்றி ஆய்வு நடத்தின. இதில் ஓட்டலுக்கு வரும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும், தங்களுக்கு வைக்கப்பட்ட குடிநீரில், மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான குடிநீரை மீதம் வைப்பது தெரிய வந்தது. மத்திய புள்ளியியல் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கணக்கெடுப்பின்படி, நாடு முழுவதும் 9.81 லட்சம் உணவகங்கள் இருக்கின்றன. இதிலிருந்து இந்தியாவின் மொத்த உணவகங்களிலும், தினமும் 16 கோடி லிட்டர் குடிநீர் வீணாகிறது, என ஆய்வு நடத்தியவர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !