உள்ளூர் செய்திகள்

மூன்று ஆண்டுகளில் வருகிறது 5ஜி!

2020ம் ஆண்டு ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை (5ஜி) தொழில்நுட்பத்தை வழங்க, மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக, மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா டில்லியில் தெரிவித்துள்ளார். இதற்கென அரசு அதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டு, ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். 5ஜி தொழில்நுட்பத்தின் மூலம் நகர்/கிராமப்புறங்களில் பிராட்பேண்ட் சேவையின் வேகம் பல மடங்கு அதிகரிக்கும். இதற்கு பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட்போன் உள்ளிட்ட கருவிகள், நம்நாட்டு தயாரிப்பாகவே இருக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு கவனம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் இதன் மூலம் உள்நாட்டில் வேலைவாய்ப்புகளும், பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !