உள்ளூர் செய்திகள்

நாம் பயன்படுத்தும் பாலில் 68% கலப்படம்

இந்தியாவில் விற்பனையாகும் பாலில், 68.7 சதவீதம் தரமற்றது என, விலங்குகள் நல வாரிய உறுப்பினர் மோகன்சிங் அலுவாலியா தெரிவித்துள்ளார்.'மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), நிர்ணயித்துள்ள தரத்தில், பால் மற்றும் பால்பொருட்கள் இல்லை. சோப்புத்தூள், காஸ்டிக் சோடா, வெண்ணிற சாயம், பார்மலின், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் போன்றவற்றைப் பாலில் கலப்பது அதிகரித்துள்ளது. தென்னிந்தியாவோடு ஒப்பிடுகையில், வட இந்தியாவில் கலப்படம் அதிகம்.' என அவர் தெரிவித்தார். 'இந்தக் கலப்படத்தை உடனடியாகத் தடுத்து நிறுத்தாவிடில், 2025ஆம் ஆண்டிற்குள் 87 சதவீத இந்தியர்கள், புற்றுநோய் உள்ளிட்ட தீவிர நோய்களால் பாதிக்கப்படுவர்' என உலக சுகாதார நிறுவனம், எச்சரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !