தங்க மழை பொழிந்த விமானம்
ரஷ்யாவில் விமான நிலையத்தில், தங்கம் மற்றும் பிளாட்டின மழை பொழிந்தது. அந்நாட்டின் யாகுதியா விமானநிலையத்திலிருந்து, ஒரு சரக்கு விமானம் புறப்பட்டு பறக்கத் தொடங்கிய சில நொடிகளிலேயே, விமானத்தில் இருந்து தங்கம், பிளாட்டினக் கட்டிகள் மழைபோல, விமான நிலைய வளாகத்துக்குள் கொட்டின. இதைத்தொடர்ந்து உடனடியாக, யாகுதியா விமான நிலையம் அடுத்த சில மணி நேரங்களுக்கு மூடப்பட்டது. தங்கமும், பிளாட்டினமும் கொட்டியதை விமானி அறியவில்லை. அவருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விழுந்து சிதறிய, தங்கமும் பிளாட்டினக் கட்டிகளும் ரஷ்யாவின் பிரபல தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமானவை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. விமானத்தில் பழுது இருப்பது தெரியாமல் பெரும் மதிப்பிலான பொருட்களை ஏற்ற எப்படி அனுமதி அளிக்கப்பட்டது என்பது பற்றிய விசாரணை நடந்து வருகிறது.