தண்ணி இல்லாத காடு
பாலைவனம் என்றதும் நம் மனதில் தோன்றும் காட்சிகள், மணற்பரப்புகளும், சுட்டெரிக்கும் வெயிலும்தான். உண்மையில் அனைத்துப் பாலைவனங்களும் மணல்வெளிகளாக மட்டுமே இருப்பதில்லை. உலகில் இருக்கும் பாலைவனங்களில் 20 சதவிகிதப் பரப்புதான் மணற்பரப்பு. மீதி சரளைக் கற்கள், பாறைகள் ஆகியவற்றால் ஆனது.எல்லாப் பாலைவனங்களும் சுட்டெரிப்பதில்லை. கடும் குளிரடிக்கும் பாலைவனங்களும் இருக்கின்றன. மங்கோலியாவின் கோபி பாலைவனம், ஒரு குளிர்ப்பாலைவனம். கடல் மட்டத்திலிருந்து, 1,500 மீட்டர் உயரத்தில் இருப்பதால் இங்கு கடுங்குளிர் நிலவுகிறது. ஒரு வருடத்தில் பெய்யும் மழை அளவு 250 மி.மீட்டருக்கும் குறைவாக இருந்தால் அந்த இடத்தைப் பாலைவனம் என்று புவியியல் அறிஞர்கள் சொல்கிறார்கள். இந்த விளக்கப்படி பனி உறைந்திருக்கும் அண்டார்டிகாவும் ஒரு பாலைவனமே. ஏனெனில், இந்தப் பகுதியின் மழையளவு மிகவும் குறைவு. மலைத்தொடருக்கு அப்பால்...பொதுவாக நீண்ட மலைத்தொடர்களுக்கு அப்பால் இருக்கும் பகுதிகள் பாலைவனமாக இருக்கின்றன. தென் அமெரிக்காவில் ஆண்டீஸ் மலைத் தொடர்கள் இருப்பதால், உலகின் மிக வறட்சியான அடகாமா பாலைவனப்பகுதி உருவானது. மத்திய ஆசியாவின் கோபி பாலைவனம் உருவானதற்கு, இமயமலைத் தொடரே காரணம். மலைத்தொடர்கள் ஈரக்காற்றையும் மழை மேகங்களையும் தடுத்து நிறுத்திவிடும். இதனால் மலைத்தொடருக்குப் பின்புறம் இருக்கும் நிலப்பரப்பு மேகங்கள் இல்லாமல் வறண்டு பாலைவனமாக இருக்கும். பகல் பாலைவனங்களில் பகல் பொழுதில் வெயில் சுட்டெரிக்கும். மேகங்களே இருக்காது என்பதுதான் இதற்குக் காரணம்.ஓர் இடத்தின் வெப்ப நிலை அங்கு இருக்கும் மேகங்களின் அளவைப் பொறுத்தது. மேகங்கள் இருந்தால் அவை பஞ்சு போலச் செயல்பட்டு சூரியனின் வெப்பத்தில் சிறிதளவை ஈர்த்துக்கொள்ளும். இதனால் நிலப்பரப்பின் மீது அடிக்கும் வெயிலின் அளவு சற்று குறையும். மேகம் இல்லாத இடத்தில் சூரியனின் வெப்பம் நேரிடையாக பூமியைத் தாக்கும். பாலைவனங்களில் மேகங்கள் இல்லாததால் பகலில் வெயில் கொளுத்துகிறது. இரவுஇரவில் கடுங்குளிர் அடிக்கும். இதற்குக் காரணமும் மேகங்கள் இல்லாத நிலைதான். மாலையில் சூரியன் மறைந்ததும், நிலப்பரப்பிலிருந்து வெப்பம் உடனே மேல் நோக்கி வெளியேறிவிடும். மேகங்கள் இருந்தால் அவை சூட்டை ஓரளவு கிரகித்துக்கொண்டு இரவில் நிலப்பரப்பு கதகதப்பாக இருக்க உதவும். மேகங்கள் இல்லாத நிலையில் பகலில் அடித்த வெப்பம் உடனே வெளியேறி இரவில் கடுங்குளிர் நிலவும்.உலகில் முக்கியமான பாலைவனங்கள்பாலைவனங்கள்: பிரதேசங்கள்அன்டார்க்டிக் - அன்டார்க்டிகாஆர்க்டிக் - அலாஸ்கா, கனடா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, ஸ்வீடன், ஃபின்லாந்து, ரஷ்யாசஹாரா - ஆப்பிரிக்காஅரேபியன் - அரேபிய தீபகற்பம்கோபி - சீனா, மங்கோலியா