பூனையைப் போல ஒரு நரி
பாலைவன நரிஆங்கிலப் பெயர்: 'ஃபென்னெக்ஃபாக்ஸ்' (Fennec Fox)உயிரியல் பெயர்: 'உல்ப்ஸ் ஸெர்டா' (Vulpes zerda)உயரம்: 20 செ.மீ.உடல் நீளம்: 40 செ.மீ.வால் நீளம்: 30 செ.மீ.எடை: 2 கிலோவேகம்: மணிக்கு 40 கி.மீ.இனப்பெருக்க காலம்: 50 நாட்கள்வாழ்நாள்: 10 ஆண்டுகள்வட ஆப்பிரிக்காவின் சகாரா பாலைவனப் பகுதிகளில் காணப்படும் சிறிய வகை நரி 'ஃபென்னெக்'. நரி இனங்களிலேயே மிகவும் சிறியது இதுதான். தோற்றத்தில் பூனையைப் போலவே இருக்கும். அதிக வெப்பத்தைத் தாங்கக்கூடிய உடல் அமைப்பைக் கொண்டது. உடல் வெள்ளை, இளம் பழுப்பு நிறத்திலும் வால் பகுதியில் கருப்புத் திட்டும் காணப்படும். உடலில் அடர்த்தியான ரோமங்கள் காணப்படும். காதுகள் நீளமானவை. கூட்டமாக வாழும். ஊர்வன, எலி, பூச்சி, முட்டை போன்றவற்றை உணவாக உட்கொள்ளும். உண்ணும் உணவின் மூலமாகவே தண்ணீரை எடுத்துக்கொள்ளும். தண்ணீர் குடிக்காமலே நீண்ட நாட்களைச் சமாளிக்கும் திறனுள்ளவை. இதன் இனப்பெருக்க காலம் 50 நாட்கள், ஒரு தடவைக்கு 2 முதல் 5 குட்டிகள் வரை ஈனும். பாலைவனப் புதர்களிலும், மண்ணில் வளைதோண்டியும் இவை வாழ்கின்றன. கழுகு, ஆந்தை, குள்ளநரி ஆகியவற்றால் இவை வேட்டையாடப்படுகின்றன.தெரிந்துகொள்வோம்!1. உலகின் மிகப் பெரிய நரி ……………………எது?2. உலகின் இரண்டாவது மிகப் பெரிய நன்னீர் ஏரி …………எது?3. இந்தியாவின் மிகப் பெரிய நன்னீர் ஏரி ……………………எது?4. கடுகு உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் நாடு ……………………எது?விடைகள்1. சிவப்பு நரி (Red Fox)2. டிடிகாகா ஏரி (Titicaca Lake), தென் அமெரிக்கா3. உலார் ஏரி, ஜம்மு காஷ்மீர்4. கனடா- ப.கோபாலகிருஷ்ணன்