தோல்வியை வெறுக்கும் கோலி!
அதிக டெஸ்ட் போட்டிகளில் (7 போட்டிகள்) வென்ற இந்திய கேப்டன், டெஸ்ட் போட்டியில் 5 ஆயிரம் ரன்களை (86 இன்னிங்ஸ்) வேகமாக எட்டியவர் என, பல்வேறு சாதனைகளைப் படைத்தவர், விராட் கோலி. “அணி தோல்வியடையும்போது என்ன நினைப்பீர்கள்” என்று அவரிடம் கேட்கப்பட்டது. “எனக்குத் தோல்வி பிடிக்காது. உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா, நியூசிலாந்து அணியிடம் தோற்றது. இந்த முடிவு, எனக்கு வேதனையைத் தந்தது. இந்திய அணிக்காக விளையாடும்போது, நான் பெருமையாகவே உணர்கிறேன். போட்டி முடிந்தபிறகு அப்படி விளையாடியிருக்கலாம், இந்த முடிவை இப்படி எடுத்திருக்கலாம் என்று பேசுவதை நான் விரும்புவதில்லை. நாங்கள் விளையாடுவதைப் பார்த்து, அடுத்த தலைமுறையினர் வியக்கவேண்டும். நான் அப்படி நினைத்துத்தான் விளையாடுகிறேன்” என்று கூறினார்.