உள்ளூர் செய்திகள்

மனிதப்பண்பு ‛ரோபோதமிழக பொறியாளர் தயாரிப்பு

கோவையைச் சேர்ந்த மென் பொறியாளர் விஜய், மனிதப் பண்புகள் கொண்ட புதியவகை 'ரோபோ'வை (humanoid robot) உருவாக்கியுள்ளார். மனிதனைப் போன்றே நடக்க, பேச, நடனமாட, பாட்டு பாடக்கூடிய இந்த வகை 'ரோபோ'க்களிடம், 19 மொழிகளில் கேள்வி கேட்கலாம். அதற்கு அது பதிலளிக்கும். வங்கிகள், ஹோட்டல்கள், கல்வி நிலையங்கள், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில், மக்களுக்கு உதவக்கூடிய வகையில், இந்த 'ரோபோ'க்கள் வடிவமைக்கப் பட்டுள்ளன. இதை உருவாக்கிய விஜய் கூறியதாவது: வருங்காலத்தில், 'ரோபோ'க்களின் பயன்பாடு அதிகமாக இருக்கும். வங்கியில் புதிதாய் ஒருவர் கணக்கு தொடங்க வருகிறார் என்றால், அவருக்குத் தேவையான அனைத்து தகவல்களையும், 'ரோபோ' மூலமே தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !