நடமாடும் நூலகம்
பிப். 12 - கிராமங்கள் அதிகம் உள்ள மதுரை மாவட்டத்தில், கிராம மக்களின் புத்தக வாசிப்பு அதிகரிக்கவேண்டுமென நூலகத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.15 லட்சம் மதிப்பில் 'மொபைல்' நூலகம் (புத்தகங்கள் அடங்கிய நகரும் வாகனம்) பயன்பாட்டில் வர உள்ளது. மதுரை மைய நூலகத்தில் 1960ஆம் ஆண்டு முதல் 'மொபைல்' நூலகம் பயன்பாட்டில் இருந்தது. 20 ஆண்டுகள் இதன் சேவை மதுரை வட்டார மக்களுக்கு கிடைத்தது. அதன் பின் இத்திட்டம் காணாமல் போய் மீண்டும் புத்துயிர் பெறுகிறது.