கரை ஒதுங்கிய புதிய உயிரினம்
சமீபத்தில் டெக்சாஸ் கடற்கரைப் பகுதியில் ஒரு வினோத கடல் உயிரினம் கரை ஒதுங்கிக்கிடந்தது. கோரைப் பற்களுடன் பார்ப்பதற்கு பயங்கரமான தோற்றமுடைய அந்த உயிரினத்தை அதற்குமுன் யாரும் பார்த்ததில்லை. அங்கே ஆய்வுப்பணியில் ஈடுபட்டிருந்த பிரீத்தி தேசாய் என்பவர், அந்த உயிரினத்தைப் படம் பிடித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் வலையேற்றி, 'இது என்ன உயிரினம்?' என்று கேள்வி எழுப்பினார். ஆராய்ச்சியாளர்கள் பலரும் பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில், விஞ்ஞானி ஒருவர், இந்த உயிரினம் 'கோரைப்பல் பாம்பு விலாங்கு' (fangtooth snakeeel) வகையைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இதேபோன்ற கோரைப்பற்கள் உடைய வேறு உயிரினங்களும் அக்கடற்கரைப்பகுதியில் வாழ்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.