துப்பாக்கிக்கு ஓய்வு
இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா. பீஜிங் ஒலிம்பிக் (2008) 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் தங்கம் வென்றார். இதன் மூலம், ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய நட்சத்திரம் என்ற சாதனை படைத்தார். சமீபத்திய ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் நழுவவிட்ட இவர், சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெற்றார்.