உள்ளூர் செய்திகள்

புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் ஸ்மார்ட் பேனா!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகத்தின் வேதியியல் பிரிவு விஞ்ஞானிகள் புதிய பேனா போன்ற ஒரு சாதனத்தைக் கண்டுபிடித்துள்ளனர். 'மாஸ்பெக் பேனா' என்று பெயரிடப்பட்டுள்ள இது, சில வினாடிகளில் மனித உடலில் உள்ள புற்றுநோய் திசுக்களை அடையாளம் காட்டிவிடும் என்கின்றனர். புற்றுநோய் அறுவை சிகிச்சையின் போது, நோய்வேறு திசுக்களில் பரவி உள்ளதா என்பதைக் கண்டறிவது இதுவரை கூடுதல் நேரம் பிடிக்கும் விஷயமாக இருந்தது. அதனை இப்பேனா எளிமையாக்கி இருக்கிறது. இதுவரை செய்யப்பட்ட ஆராய்ச்சிகளின்படி 96 % மிகத்துல்லியமாக பாதிக்கப்பட்ட இடத்தை இது காட்டுவதாகவும், விரைவில் மருத்துவர்களின் கைகளில் இது கிடைக்கும் என்றும் விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !