ஸிகா வைரஸுக்கு தடுப்பூசி
கொசுக்கடியால் பரவும் 'ஸிகா' (Zika) வைரஸ் உலக அளவில் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. தற்போது ஸிகா வைரஸைக் கட்டுப்படுத்தும் தடுப்பூசியை அமெரிக்க ராணுவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். சோதனை முறையில் இந்தத் தடுப்பூசியை குரங்குகளுக்குச் செலுத்திப் பரிசோதனை செய்ததில் இது குரங்குகளுக்குப் பாதுகாப்பு அளிப்பது உறுதியாகி உள்ளது. மனிதர்களுக்கு இந்தத் தடுப்பூசி பாதுகாப்பானது, பயனளிக்கக் கூடியது என்பதை உறுதி செய்ய மேலும் பல சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.