அதிக ஞாபகசக்தியால் அமைதியை இழந்த பெண்
ஆஸ்திரேலியா நாட்டின், பிரிஸ்பேன் நகரைச் சேர்ந்தவர் ரெபெக்கா ஷாரோக். 27 வயதான இவருக்கு, சூப்பர் நினைவாற்றல் உள்ளது. இதனால், பெரும் மனச்சோர்வுக்கு ஆளாவதாகத் தெரிவிக்கிறார் ரெபெக்கா. 'நான் பிறந்து 12வது நாளில், காரின் ஓட்டுனர் இருக்கையில் கிடத்தி, அப்பா என்னை புகைப்படம் எடுத்தார். அன்று அவர் என்ன ஆடை அணிந்திருந்தார், காரில் என்ன பொம்மை தொங்கிக் கொண்டிருந்தது போன்ற நுணுக்கமான விஷயங்களும் எனக்கு நினைவிருக்கிறது.அன்று தொடங்கி இன்று வரை, யாருடன் என்ன வார்த்தை பேசினேன், என்ன சாப்பிட்டேன் என்பதெல்லாம் நினைவில் இருக்கிறது. Highly Superior Autobiographical Memory என்கிற இப்பிரச்னை, உலகில், 80 பேருக்கு மட்டும் இருக்கிறது.இவ்வளவு நினைவாற்றல் இருப்பது நிச்சயம் நல்லதல்ல. பல துக்கமான சம்பவங்களும் என் நினைவில் தேங்கிக்கிடப்பதால், என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.' என்று வருத்தப்படுகிறார் ரெபெக்கா ஷாரோக்.