கொள்ளையர்களை மடக்கிய அதிரடி பெண்கள்
ஹரியாணா மாநிலத்தில், வங்கிக்கொள்ளையில் ஈடுபட முயன்ற கொள்ளையர்களை, இரண்டு பெண்கள் மடக்கிப்பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். அவர்களுக்கு நாடு முழுவதிலுமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. குருகிராம் நகர் பகுதியில் அமைந்துள்ள, பதுஷாபூர் எஸ்.பி.ஐ., கிளையில், துப்பாக்கியுடன் இரண்டு கொள்ளையர்கள் நுழைந்தனர். தாக்குதலுக்கு உள்ளான போதும், அந்தப் பெண்கள் கொள்ளையர்களை எதிர்த்து துணிவோடு சண்டையிட்டனர். ஒரு கட்டத்தில், கொள்ளையர்களின் துப்பாக்கிகளை பறித்துக்கொண்ட பெண்கள், பின்னர் அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர். உயிரையும் பொருட்படுத்தாமல், இரண்டு பெண்கள் அதிரடியாக செயல்பட்ட காட்சி, சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. அப்பெண்களின் துணிவுக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.