செயலே வாழ்க்கை!
டாக்டர். அம்பேத்கர் பிறந்த தினம் ஏப்ரல் 1414.4.1891 - 6.12.1956சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாகவும் விளங்கியவர் அம்பேத்கர். ஆசிரியர், எழுத்தாளர், சமூக நீதிப் புரட்சியாளர் என, பல சிறப்பு அடையாளங்களைக் கொண்டவர். 'பாபா சாகேப்' என்று அழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர், மத்தியப் பிரதேச மாநிலம் அம்பாவாதே என்னும் கிராமத்தில் பிறந்தார். பள்ளி, கல்லூரிப் படிப்புகளை மும்பையில் முடித்த அம்பேத்கர், உயர் கல்வியை அமெரிக்காவில் பயின்றார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அரசியல், பொருளாதாரம், சமூகவியல், தத்துவம் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார். சட்டப் படிப்பில் 'பாரிஸ்டர்' பட்டமும் பெற்றார். பின்னர் இந்தியா திரும்பிய அம்பேத்கர், 1923ல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டார். சமுதாய அமைப்பிலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைக்கச் செய்ய தன் வாழ்நாளை அர்ப்பணித்தார். தீண்டாமை ஒழியவும் பாடுபட்டார். சமுதாயம் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தோடு தங்கள் செயலையும் சிந்தனையையும் தீர்மானித்துக் கொள்கிறவர்கள் மிகச் சிலர்தான். அப்படிப்பட்ட ஒருவர் அம்பேத்கர்.