வயசு 4: வாசிப்பில் செஞ்சுரி
சிகாகோவைச் சேர்ந்த கேலெப் கிரீன் (Caleb Green) எனும் நான்கு வயதுச் சிறுவன், வாசிப்பில் ஒரு மராத்தான் சாதனையைச் செய்திருக்கிறான். தொடர்ச்சியாக 100 புத்தகங்களை சிறுவன் கிரீன் வாசிக்க, அதை அவனது பெற்றோர் காணொளியாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். பத்து புத்தகங்களைப் படித்து முடித்ததும், ஒரு சின்ன இடைவெளி எடுத்துக்கொண்ட கேெலப், அவ்வப்போது ஒரு சிறு நடனத்தின் மூலம் உற்சாகப்படுத்திக்கொண்டு, அடுத்த பத்து புத்தகங்களைக் கையிலெடுக்க ஆரம்பித்துவிடுவான். 9 மணி நேரத்தில் 100 புத்தகங்களைப் படித்து செஞ்சுரி அடித்திருக்கும் இந்த அதிசய சிறுவன், தன் அக்காவைவிட அதிகமான புத்தகங்கள் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால்தான், இச்சாதனையைத் தொடங்கியிருக்கிறான். 4 ஆயிரம் பேர் வரை நேரலையில் இந்தச் சாதனையை பார்த்திருக்கிறார்கள்.