உள்ளூர் செய்திகள்

ஏஐ சகாப்தம்: கூகுளின் எந்த ஏஐ?

1. டிஎன்ஏ, ஆர்என்ஏ, புரதம் ஆகியவற்றின் முப்பரிமாண அமைப்பைத் துல்லியமாகக் கணிக்கவும், மருந்து தயாரிப்பு ஆராய்ச்சியை வேகப்படுத்தவும் கூகுள் டீப்மைண்ட் உருவாக்கியுள்ள தொழில்நுட்பத்தின் புதிய பதிப்பு எது? 2. கார் ரேஸிங், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட வீடியோ கேம்களில் ஒரு மனிதனைப் போலவே சூழலைப் புரிந்துகொண்டு வெவ்வேறு விளையாட்டுகளை விளையாடவும், அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் பயிற்சி அளிக்கப்பட்ட 'ஏஐ ஏஜென்ட்' எது?3. உங்கள் ஸ்மார்ட்போன் கேமரா மூலம் நீங்கள் எதைப் பார்க்கிறீர்களோ, அதைப் புரிந்து கொண்டு நிகழ்நேரத்தில் உங்களுடன் உரையாடவும், பொருட்களை அடையாளம் காணவும் உதவும் கூகுளின் எதிர்கால மல்டிமாடல் ஏஐ (Universal AI Agent) எது?4. வானிலை முன்னறிவிப்பில் புரட்சியை ஏற்படுத்தியுள்ள, சாதாரண சூப்பர் கம்ப்யூட்டர்களை விட 1000 மடங்கு வேகமாகவும், துல்லியமாகவும் 15 நாட்களுக்கான வானிலையை முன்கூட்டியே கணிக்கும் கூகுளின் ஏஐ மாடல் எது?விடைகள்: 1. ஆல்பாஃபோல்டு 3 (AlphaFold 3).2. சிமா (SIMA - Scalable Instructable Multiworld Agent)3. ப்ராஜெக்ட் ஆஸ்ட்ரா (Project Astra)4. ஜென்காஸ்ட் (GenCast)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !