காற்று மாசு நகரங்கள்
காற்றில் உள்ள மாசு குறித்து உலக அளவில் எடுக்கப்பட்ட ஆய்வில், மிகவும் மோசமான 20 நகரங்களில், 13 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில், கடந்த ஆண்டு முதல் இடத்தில் இருந்த டில்லி, தற்போது, 11ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.உலகம் முழுவதும் 103 நாடுகளில் உள்ள 3,000 நகரங்கள் காற்றில் உள்ள மாசு அடிப்படையில் பட்டியல் இடப்பட்டுள்ளன. பி.எம். - 2.5 எனப்படும், ஒரு கன மீட்டரில் 2.5 மைக்ரான் அளவுள்ள மாசு ஏற்படுத்தும் பொருட்கள் எவ்வளவு உள்ளன என்பதன் அடிப்படையில், காற்றின் தூய்மை கணக்கிடப்படுகிறது. சென்னை உள்ளிட்ட தென் மாநில நகரங்கள் எதுவும் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.