உள்ளூர் செய்திகள்

உலகம் யாவையும்: எந்த அருங்காட்சியகம்?

1. லியோனார்டோ டாவின்சியின் உலகப் புகழ்பெற்ற 'மோனாலிசா' ஓவியம் மற்றும் 'வீனஸ் டி மைலோ' சிலை ஆகியவற்றைக் கொண்டுள்ள உலகின் மிகப்பெரிய கலை அருங்காட்சியகம் எது?2. எகிப்திய ஹைரோகிளிஃபிக்ஸ் (Egyptian hieroglyphs) எழுத்துகளைப் படிக்க உதவிய 'ரொசெட்டா ' (Rosetta Stone) வைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் எது?3. கடலுக்கு அடியில் 500க்கும் மேற்பட்ட மனித அளவிலான சிலைகளை நிறுவி, பார்வையாளர்கள் ஸ்கூபா டைவிங் செய்து பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள உலகின் விசித்திரமான நீருக்கடியில் உள்ள அருங்காட்சியகம் எது?4. டைனோசர்களின் பிரமாண்டமான எலும்புக்கூடுகள், உலகின் மிகப்பெரிய 'ஹோப் டைமண்ட்' (Hope Diamond) விலைமதிப்பற்ற நீலக்கல் வைக்கப்பட்டுள்ள வரலாற்று அருங்காட்சியகம் எது?5. சிந்து சமவெளி நாகரிகத்தின் புகழ்பெற்ற 'நடனமாடும் மங்கை' வெண்கலச் சிலை வைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் எது?விடைகள்:1. லூவர் அருங்காட்சியகம் [Louvre Museum] , பிரான்ஸ்.2. பிரிட்டிஷ் அருங்காட்சியகம் (British Museum) லண்டன், இங்கிலாந்து.3. மியூசியோ (மூசா)-நீருக்கடியில் உள்ள கலை அருங்காட்சியகம் [MUSA-Museo Subacuático de Arte] கான்கன், மெக்சிகோ,4. ஸ்மித்சோனியன் தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் [Smithsonian National Museum of Natural History] வாஷிங்டன் டி.சி., அமெரிக்கா.5. தேசிய அருங்காட்சியகம் [National Museum] 45 டில்லி, இந்தியா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !