உள்ளூர் செய்திகள்

யானைக்கெல்லாம் தாத்தா

யானைகளுக்கெல்லாம் தாத்தாவுக்கும் தாத்தா ஒன்று இருந்திருக்கிறது! அதுதான் 'மாம்மோத்' (Mammoth). மாமோத்துகள் பூமியில் 4.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவை. 'எலிபென்டிடா' (Elephantidae) என்ற உயிரினக் குடும்பத்தைச் சார்ந்த இவை, யானைகளின் மூதாதையர்களாக இருந்திருக்கின்றன. தற்போது நாம் பார்க்கிற யானைகளை விட மிகப்பெரிய உருவமும், பெரிய வளைந்த தந்தங்களும் இவற்றுக்கு உண்டு. இதன் உடல் அடர்ந்த முடிகளால் மூடப்பட்டு இருக்கும். இதை 'கம்பளி யானை' என்றும் குறிப்பிடுவார்கள். 'மமோட்' (Mamoht) என்ற ரஷ்ய வார்த்தையில் இருந்து 'மாமோத்' என்ற பெயர் உருவானது. இந்த வார்த்தைக்கு 'மிகப்பெரிய' என்று பொருள். மாமோத்துகள் ஐந்து மீட்டர் உயரமும், ஆறு முதல் எட்டு டன் எடையும் கொண்டவை. சைபீரியாவின் பனிப்பகுதியிலும் வேறு சில இடங்களிலும் புதைந்திருந்த மாமோத்தின் முழு உருவப் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !