அதிசயம் - ஆனால் உண்மை!
பிஸ்தா, கொட்டை வகையைச் சேர்ந்தது அல்ல:உண்மையிலேயே அவை, ட்ரூப் (Drupe) எனும் சதைப்பற்றுள்ள கனி வகையைச் சேர்ந்தது. இதில் உள்ள விதையை, ஓடு போன்றதொரு அமைப்பு மூடியிருக்கும்.பாக்டீரியா, பூஞ்சை ஆகியவற்றைத் தேன் அழிக்கும்:தேனில் ஃபினாலிக், சின்னமிக் ஆகிய அமிலங்கள் உள்ளன. அந்த அமிலங்களுக்கு இத்தன்மை உள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.மனநிலையை மாற்றும் தன்மையுடையது ஜாதிக்காய்:சிறிய அளவில் எடுத்துக்கொண்டால், ஜாதிக்காய் சுவை கூட்டுவதாக இருக்கும். அதிக அளவு எடுத்தால், அதிலிருக்கும் 'மிரிஸ்டிசின்' என்ற பொருள், மனநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும்.கெட்டுப்போன முட்டைகள் மிதக்கும்:ஒரு கிண்ணத்தில், குளிர்ந்த நீரில் முட்டையைப் போட வேண்டும். அது மூழ்காமல் மிதந்தால், கெட்டுப் போயிருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.ஜாமும், ஜெல்லியும் வெவ்வேறு:ஜாம் என்பது, பழத் துண்டுகளால் ஆனதால், அடர்த்தி மிக்கதாக இருக்கும். பழச் சாற்றினால் செய்யப்பட்ட ஜெல்லி, அடர்த்தி குறைவாக இருக்கும்.விமானப் பயணத்தில் உணவின் சுவை மாறுபடும்:இதற்குக் காரணம், உயரத்தில் செல்லச் செல்ல, உடலில் நிகழும் வேதியியல் மாற்றங்கள் சுவையுணர்வை பாதிப்பது தான்.