அலெக்ஸாவில் அசத்தும் தினமலர்
அமேசான் நிறுவனம், அலெக்ஸா எகோ டாட் (alexa echo dot) என்ற மெய்நிகர் உதவியாளரை (Virtual Assistant) சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. நமது குரல் வழி உத்தரவுகளை இது செயற்படுத்தும். இதனிடம் இசை, செய்திகள், பங்குச்சந்தை, நாட்டு நடப்பு, சந்திக்க வேண்டிய நபர் என நாம் எதைப்பற்றிக் கேட்டாலும் சில நொடிகளில் நமக்குக் கொடுக்கிறது. இந்தியாவிலும் இது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சாத்தியப்படக்கூடிய அனைத்துவகையான புதிய தொழில் நுட்பங்களில் எல்லாம் செய்திகளை அளிக்கும் தினமலர், இதிலும் தன் முத்திரையைப் பதித்துள்ளது. அமேசானில், தினமலருக்கான ஸ்கில்--ஐ டவுன்லோடு செய்தால் போதும். பிறகு, 'அலெக்ஸா'விடம் தினமலர் என்று சொன்னால், வானிலை தொடங்கி சினிமா வரை ஒரு பெரிய பட்டிலை வாசிக்கிறது. அதில் விருப்பமானவற்றைத் தேர்வுசெய்து நீங்கள் சொன்னால், அது பற்றிய விவரங்களை சில நொடிகளில் தமிழில் கூறத் தொடங்கி விடுகிறது. இதற்கு உலகத் தமிழர்களிடமிருந்து நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.