உள்ளூர் செய்திகள்

அற்புத ஆங்கிலம்: சத்தத்துக்கும் பெயர் உண்டே...

வித்தியாசமான சில ஒலிகளுக்கு ஆங்கிலத்தில் என்னென்ன பெயர்கள் என்பதைப் பார்ப்போம். * நீரில் ஏதோ ஒரு பொருள் விழுந்தால் ஒரு சத்தம் வரும். வாளித் தண்ணீரில் கனமான ஒரு ஷாம்பூ பாட்டிலை (மூடியைத் திறந்துவிடாமல்) போட்டுப் பாருங்கள். அந்தச் சத்தம் கேட்கும். அதற்கு ஆங்கிலத்தில் Splash என்று பெயர். * எடையுள்ள ஒரு பொருள். உலோகம் அல்ல. அது உறுதியான தரையில் விழும்போது ஒரு சத்தம். அது, Thud.* ஈரமற்ற ஒரு பொருள். அது உடையும்போது அல்லது நாம் சொடக்குப் போடும்போது வரும் ஒலி Snap.* உலோகங்கள், பாத்திரங்கள் என்று வைத்துக்கொள்ளுங்களேன், மோதிக்கொள்ளும்போது ஏற்படும் பேரொலி, Clang.* சரியாகப் பராமரிக்கப்படாத, பழைய கதவைத் திறக்கும்போது நீளமாகக் கேட்குமே ஒரு கீச்சொலி அதன் பெயர், Creak. * மழைத்தூறல் துளி தரையைத் தொடும்போது ஒரு மெல்லிய சத்தம் வரும். அதற்கு Patter என்று பெயர். * உணவுப்பொருள் எண்ணெயில் வறுபடும்போது வருமே ஒரு 'ஹிஸ்ஸ்ஸ்ஸ்' ஒலி, அதை, Sizzle என்கிறார்கள். முறுக்கு, சிப்ஸ் போன்றவற்றை நொறுக்கினால் எழக்கூடிய 'கரமுர' சத்தத்துக்கு என்ன பெயர்?விடைகள்: Crumble.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !