அமிழ்தமிழ்து: அந்தக் எந்தக் கை
கை என்ற எழுத்தில் முடியும் சொற்கள் தமிழில் எண்ணற்றவை. ஈவது ஈகை. வெற்றி மலர் வாகை. வாழ்வது வாழ்க்கை. எதிரியை உருவாக்குவது பகை. இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம். கீழேயுள்ள குறிப்புக்கேற்ப 'கை' என்று முடியும் சொற்களை எழுத வேண்டும்.அ. மூவகை இடங்களில் தொலைவிலுள்ள இடத்தைக் குறிப்பது___________ஆ. காலத்தைக் குறிக்கும் அளவு___________இ. மெலிதாய்ச் சிரிப்பது___________ஈ. மலர்களில் ஒன்று___________உ. மரத்தை அறுத்துப் பெறுவது___________ஊ. பாண்டியர் துறைமுகம் ___________எ. மயிலுக்கு அழகு___________ஏ. உடலுக்கு இன்னொரு சொல்___________ஐ. பிச்சை புகினும் ___________ நன்றே.- மகுடேசுவரன்விடைகள்: அ. படர்க்கைஆ. நாழிகைஇ. புன்னகைஈ. மல்லிகைஉ. பலகைஊ. கொற்கைஎ. தோகைஏ. யாக்கைஐ. கற்கை