காற்று இல்லாத நிலா!
நிலா அழகாக இருக்கிறது. அதைத் தொலைவிலிருந்து மட்டுமே ரசிக்க முடியும். நிலாவிற்குச் சென்று நாம் வசிக்க முடியாது. ஏனென்றால் நிலாவில் காற்று கிடையாது. பூமியின் புவி ஈர்ப்பு விசையைக் காட்டிலும் நிலாவில் ஈர்ப்பு விசை ஆறு மடங்கு குறைவு. பூமியில் ஈர்ப்பு விசை இருப்பதால்தான் அந்த விசை காற்று மண்டலத்தை இழுத்துப் பிடித்து வைத்து இருக்கிறது. அத்தகைய விசை சந்திரனுக்கு இல்லாததால் அங்கே காற்று இல்லை. சந்திரனோடு ஒப்பிடும்போது, செவ்வாயின் ஈர்ப்பு விசை கொஞ்சம் பரவாயில்லை. பூமியின் ஈர்ப்பு விசையின் பாதியளவு உள்ளது. இதன் காரணமாக அங்கே கொஞ்சம் காற்று உள்ளது. எனவே அங்கு உயிர்கள் வாழ வாய்ப்பிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். வியாழன் கிரகத்தின் ஈர்ப்பு விசை பூமியைக் காட்டிலும் 350 மடங்கு அதிகம். இந்த ஈர்ப்பு விசைக்கு உட்பட்டு நாள்தோறும் விண்கற்கள் வியாழனில் விழுந்து கொண்டே இருக்கின்றன. வால் நட்சத்திரங்களும் அடிக்கடி வந்து மோதுவது உண்டு. இந்த அபாயகரமான ஈர்ப்பு விசையால், வியாழனில் மனிதன் உயிர் வாழ இயலாது.