உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் இகுவானா!
நாய், பூனை வளர்ப்பது ரொம்ப சகஜம். புறா, முயல் வளர்ப்போர் உண்டு. வெளிநாட்டு உயிரினமான இகுவானாவை வளர்ப்பார்களா? விஜய் என்ற ஆர்வலர் வளர்க்கிறார் என்று கேள்விப்பட்டதும் அவர் வீட்டு முன் ஆஜரானோம். என்னது இது? பெரிய சைஸ் பல்லி மாதிரி இருக்கே என்று கேட்க, “ஊஹூம்.. இது 'இகுவானா'. இது பல்லி மாதிரியும் பச்சோந்தி மாதிரியும் இருக்கிற ரெப்டைல்” என்றார் விஜய். அவர் கை நீட்டியதும், தோளில் பாசமாக ஏறிக்கொண்டது இகுவானா. விஜய் தைரியம் கொடுக்க, பயந்தபடியே தொட்டோம். இகுவானா, படுசாது. முறைத்துக்கூடப் பார்க்கவில்லை.ஆயுட் காலம் : 15-20 ஆண்டுகள்அளவு: 7 அடி வரை (வாலையும் சேர்த்து)பராமரிப்பு: இகுவானா குட்டியைச் சிறுவயது முதலே தொடர்ந்து தூக்கி வைத்து, நம்மோடு நட்புடன் இருக்கப் பழக்கப்படுத்த வேண்டும். கூண்டில் வைக்கலாம். பெரிய கூண்டாக இருந்தால், வளரும்போது உதவும்.நீங்க என்ன புதுசா இகுவானா வளர்க்கறீங்க?முதலில் கொண்டைக் கிளிகளை வளர்த்தேன். அதுக்கு அப்புறம் ஊர்வன விலங்குகள் மீது பிரியம் வந்தது. எப்படியாச்சும் ஒரு ஊர்வன விலங்கை வீட்டில் வளர்க்க யோசிச்சேன். அப்படித்தான் இகுவானா எங்கள் வீட்டுக்கு வந்தான். கடந்த ஐந்தாண்டுகளாக வளர்த்து வருகிறேன்.உங்க பெற்றோர் ஒண்ணும் சொல்லலியா?அவங்களுக்கும் செல்லப் பிராணிகளைப் பிடிக்கும். ஆனாலும், இகுவானா என்றதும் தயங்குனாங்க. ஆனால், பழகியதும் அவங்களுக்குப் பிடிச்சுப்போச்சு. இப்போ என் மனைவி, குழந்தை என, எல்லோருமே பயமே இல்லாமல் அதோட விளையாடுவாங்க.நாய், பூனைங்க எப்படி நடந்துகொள்ளும்னு தெரியும். இகுவானாவைப் பத்தி எப்படித் தெரிஞ்சுக்கிட்டீங்க?இது ஒரு சாதுவான பிராணி. நீங்கள் கையில் தூக்கும்போதே, உங்களுடைய உணர்வைப் புரிஞ்சுக்கும். இகுவானா, குட்டியாக என்னை முதலில் பார்த்தது. அன்று முதல் என்னைத் தாயாக நினைச்சு, வளர்ந்து வர்றான். நம்மைத் தாக்குவானோன்னு நினைச்சுப் பயப்படத் தேவையில்லை.முதன்முதலில் இகுவானாவை வளர்க்க ஆரம்பிச்சபோது பயப்படலியா?முதல்ல கொஞ்சம் பயம் இருந்தது. ஆனா, எனக்குப் பிடிச்சுத்தானே வாங்கினேன். அதனால, அதுக்குப் பயம் கொடுக்கிற மாதிரி நான் நடந்துக்கல. இதை எப்படித் தூக்கணும், எப்படிப் பழக்கணும்னு எல்லாத்தையும் வளர்க்கும்போதுதான் கத்துக்கிட்டேன். நீங்களும் ஆசைப்பட்டு வளர்த்தா, பயமும், பதற்றமும் வராது. இகுவானா என்ன சாப்பிடும்?ம்.. கீரைகள்தான் மிகவும் பிடித்த உணவு. பச்சைக் காய்கறிகளும், பழங்களும் கொடுக்கலாம். வீட்ல இகுவானா இப்படி சுதந்திரமா சுத்தித் திரியுமா?(சிரிப்புடன்) ரொம்ப காலத்துக்கு வீட்ல கூண்டுக்குள்ள வைக்கல. இப்போ குழந்தைங்க இருக்கறதால, இகுவானாவை ஓர் அறையில வெச்சிருக்கோம். விருந்தாளிங்க வந்தா இதை விநோதமாகப் பார்த்து, கையில் வச்சுக்க கேட்கறாங்க. அந்த மாதிரி தொந்தரவு இல்லாம இருக்க அறையிலோ, கூண்டிலோ வைப்பேன். எங்க வீட்டுல இகுவானா, சுதந்திரமாகச் சுத்திவரும். இகுவானாவை நாங்கள் வாங்க முடியுமா?தாராளமா, ஆனா அதுக்கு உங்களுக்கு 18 வயசாவது ஆகியிருக்கணும். பெற்றோருடைய உதவியும் தேவை. இப்போ நானே இதை வளர்த்து, குட்டிகளைக் கொடுக்கறேன்.வேறு ஏதாச்சும் செல்லப்பிராணிகள் வளர்க்க ஆசை இருக்கா? நிச்சயம். குரங்குகள் வளர்க்கணும்னு ரொம்ப ஆசை..