பேதமில்லாத மனது
சிங்கப்பூரைச் சேரந்த மெலனீ சூ (Melanie Chew), சிறப்புக் குழந்தைகளை குதிரைகளைப் பராமரிக்கும் பணிக்கு அமர்த்தலாம் என்கிறார். சிறப்புக்குழந்தைகளால் குதிரையின் நண்பர்களாக இருக்க முடியும் என்கிறார். குதிரைகள் மனிதர்களில் பேதம் பார்ப்பதில்லை. குட்டையா, உயரமா, குண்டா, ஒல்லியா, சிறப்புத் தேவை உள்ளவர்களா, இல்லையா என்பன போன்ற எந்தப் பேதமும் இல்லாத விலங்குகளோடு பழகும்போது இக்குழந்தைகளின் வன்முறை, கோபம், மன அழுத்தம் போன்றவை காணாமல் போகின்றன என்று தன் அனுபவத்திலிருந்து சொல்கிறார் இவர். இந்த வேலைகளின் மூலம் குழந்தைகள் பொறுப்புகளை எடுத்துகொள்வது, திட்டமிட்டு வேலைகளைச் செய்வது போன்றவற்றைக் கற்றுக் கொள்கிறார்களாம்.