உள்ளூர் செய்திகள்

கொடைக்கானல் மலைப்பகுதியில் ஸ்கை வாக் அமைக்க ஏற்பாடு

கொடைக்கானல்: தமிழக சுற்றுலாத் துறையும், வனத் துறையும் இணைந்து சுற்றுலா வளர்ச்சிக்காகவும், இயற்கை குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும், புதிய திட்டங்களை செயல்படுத்த உள்ளன. அதில் ஒரு திட்டமாக, வெளிநாட்டு மலைப்பிரதேசங்களில் மிகவும் பிரபலமாக இருக்கும் 'ஸ்கை வாக்' எனும் ஆகாய நடைபாதைப் பாலத்தை கொடைக்கானலில் கொண்டுவர திட்டமிட்டுள்ளன. இதற்காக 'டால்பின்ஸ்னோஸ்' என்ற இடத்தைத் தேர்வு செய்திருக்கும் வனத்துறையினர், உயரே இரும்புத் தடுப்புகள் கொண்ட கண்ணாடிப் பாலம் அமைக்க உள்ளனர். இதன் மேல் பாதுகாப்பாக மக்கள் நடந்து சென்று உயரத்தில் இருந்து இயற்கைக் காட்சிகளை ரசிக்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !