கல்லிலே கலை வண்ணம்
சிறிய கருங்கல்லை அழகிய 'பேப்பர் வெயிட்' ஆக எளிதாகச் செய்யலாம்!தேவையான பொருட்கள்:1. சிறிய கருங்கல்2. வண்ணக் களிமண் (Moulding Clay)3. சிறிய கத்திவண்ணக் களிமண்ணை விதவிதமாக உருட்டிக்கொள்ள வேண்டும்.அந்த உருண்டையில் இலை போலவும், பூ போலவும் செய்து கொள்ளவும்.இலை, பூ வடிவங்களை கல்லில் ஒட்ட வேண்டும். லேசாக அழுத்தினாலே ஒட்டிக்கொள்ளும்.இப்போது அழகிய 'பேப்பர் வெயிட்' தயார்! இதைச் செய்து பார்க்க நீங்களும் தயார்தானே!-ஜெயஸ்ரீ நாராயணன்