கலையும் கூடாரம்
சர்க்கஸ் என்பதை எங்கே பார்த்திருக்கிறீர்கள்? டிவியில்தானே? பெரிய நகரங்களில் இருந்தீர்களானால், நேரிலேயே பார்த்திருக்கலாம். பெரிய பெரிய காட்டு விலங்குகள் எல்லாம் சாதுவாக வந்து வித்தை காட்டிவிட்டுப் போகும். மனிதர்களோ தாவுவது, அந்தரத்தில் சுழல்வது என்று விதவிதமான வித்தைகளை அநாயாசமாகச் செய்வார்கள். அந்த சாகசங்களை எல்லாம் இனி பார்க்க முடியுமா என்பதே ஐயம். வரவேற்புக் குறைவால் சர்க்கஸ் கூடாரங்கள் களை இழந்துவருகின்றன. ஒரு சர்க்கஸ் அரங்கத்தில் இருந்து கண்ணுக்கு விருந்தாகும் சில காட்சிகள் இங்கே உங்களுக்காக…