உள்ளூர் செய்திகள்

காலம் மாறும்; உணவும் மாறும்!

உடலின் செரிமானத்தை மையமாக வைத்துத்தான் உணவுமுறைப் பழக்கங்கள் தோன்றியுள்ளன. தற்போது, எல்லா காலங்களிலும் எல்லா வகை உணவுகளையும் சாப்பிடுகிறோம். இதனால், சிலருக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. நம் முன்னோர்கள் காலநிலைக்கு ஏற்றவாறு என்ன சாப்பிட்டார்களோ, அதைத்தான் இன்றைய உணவு மருத்துவர்கள் பரிந்துரை செய்து வருகிறார்கள். காலச்சக்கரத்தை கொஞ்சம் முன்னால் திருப்பி, நம் முன்னோர்கள் என்ன சாப்பிட்டார்கள் என தெரிந்துகொள்வோமா?கோடைக்காலம்: மே மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கி, ஜூலை மாதம் இரண்டாம் வாரம் வரை நீளுவதே கோடை. இந்தச் சமயத்தில், உடல் மிகவும் பலவீனமாக இருக்கும். அதனால், உடல் வலிமைபெற இனிப்பு, மற்றும் குளிர்ச்சி தரும் உணவுகளைச் சாப்பிட்டார்கள். பார்லி, பால், சர்க்கரை, அரிசி, நெய், மான் இறைச்சி போன்றவை பண்டைய கோடைக்கால உணவுகள். உப்பு, புளிப்பு, காரமான உணவுகளை இந்தக் காலகட்டத்தில் மக்கள் அதிகம் சாப்பிடுவதில்லை.மழைக்காலம்: இந்தியாவில் தென்கிழக்குப் பருவமழை மற்றும் வடமேற்குப் பருவமழை என, இரண்டு காலங்கள் உண்டு. ஆகவே, மாதங்கள் குறிப்பிடவில்லை.மழைக்காலத்தில் உடலின் செரிமான சக்தி குறைவாக இருக்கும். அதனால், சூடான உணவுகளே மழைக்கால உணவாக இருந்தது. செரிமானமடையத் தாமதமாகும் இறைச்சி வகைகள் மழைக்காலத்தில் தவிர்க்கப்பட்டன.பார்லி, கோதுமை, நன்கு கொதிக்க வைத்த குழம்பு வகைகளையே, மக்கள் மழைக்காலத்தில் உண்டார்கள்.குளிர்காலம்: நவம்பர் மாதம் இரண்டாவது வாரம் முதல் மார்ச் மாதம் இரண்டாவது வாரம்வரை. இக்காலத்தில் நம் வலிமை உச்சத்தில் இருக்கும். எனவே, தேங்காய், பாதாம், வேர்க்கடலை, எள், முந்திரிப்பருப்பு போன்ற உணவுகளைச் சாப்பிட்டார்கள். இனிப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளே குளிர்கால உணவுகள்.- காரா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !