உள்ளூர் செய்திகள்

பேட்மின்டன் பயிற்சிதரும் கையணிப் பட்டை!

மும்பை ஐஐடி மாணவர்கள், பேட்மின்டன் பயிற்சி வழங்கும் கையணிப் பட்டையை உருவாக்கியுள்ளனர். பேட்மின்டன் விளையாடுபவர்கள் இந்தக் கைப்பட்டையை அணிந்துகொள்ள வேண்டும். அதில் பொருத்தப்பட்டிருக்கும் சென்சார்கள், விளையாடுபவரின் கையசைவுகளை உன்னிப்பாக பதிவு செய்யும். அதன்பின்னர், அவர்களின் விளையாட்டு முறைகளை, பேட்மின்டன் சாம்பியன்களோடு ஒப்பிட்டு, அவர்கள் எப்படி பந்துகளை எதிர்கொண்டிருப்பார்கள் என்று குறிப்பிட்டு, வரைபடத்தை வெளியிடும். இதன்மூலம் நமது ஆட்டமுறைகளை நாம் மெருகேற்றிக்கொள்ளலாம். வீரர்களின் வேகம், சக்தியைக் கணக்கிட்டு, அதுதொடர்பான கருத்துகளை, உடனுக்குடன் வெவ்வேறு அதிர்வுகள் மூலம் வெளியிடும். இந்த பயிற்சி முறைக்கு CoMBaT என்று பெயரிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !