உயிரியல் உலகம்: ரீலா? ரியலா?
ஸ்டீவியா, சர்க்கரைத் துளசி என்று அழைக்கப்படுகிறது.உண்மை. ஸ்டீவியா (Stevia), சீனித்துளசி அல்லது சர்க்கரைத் துளசி என்று அழைக்கப்படுகிறது. இது இதன் இனிப்பு இலைக்காகப் பிரபலமாக உள்ளது. இந்தத் தாவரத்தை, பொதுவாக மிட்டாய் இலை (Candy leaf), இனிப்பு இலை, சர்க்கரை இலை எனவும் குறிப்பிடுகின்றனர். தாவரவியல் பெயர் ஸ்டீவியா ரெபாடியானா (Stevia Rebaudiana). சூரியகாந்தி குடும்பத்தின் ஒரு பிரிவான ஸ்டீவியா எனப்படும் தாவரவியல் குடும்பத்தின் ஒரு பேரினம் ஆகும்.2 - 3 அடி உயரம் வரையில் வளரக்கூடியது. பூக்கள் வெள்ளை நிறத்திலும், விதைகள் கறுமை நிறத்திலும் இருக்கும். பரந்த புல்வெளிகளிலும், மலைப்பகுதிகளிலும் நன்கு வளரக்கூடியது. தென் அமெரிக்காவை தாயகமாகக் கொண்டது.பிரேசில், பராகுவே நாட்டைச் சேர்ந்த குவாரனி எனும் பூர்வக் குடிகளால் 1,500 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.சுவையூட்டும் பொருட்களின் ஆதாரமாக உள்ள இந்தத் தாவரம், பல்வேறு வர்த்தக பெயர்களில் விற்கப்படுகிறது. சர்க்கரைப் பதிலீடு பொருளாகப் பயன்படுகிறது.பல்வேறு இனிப்பு பண்டங்கள் உற்பத்தி செய்ய, உதவும் ஸ்டீவியால் கிளைகோசைடு எனும் மூலப்பொருள், இவற்றின் இலையிலிருந்தே பெறப்படுகிறது.மேலும், முக்கியமாக សំ (Stevioside), ரெபாடியோசைடு (Rebaudioside) G மூலப்பொருட்களும் இதிலிருந்தே கிடைக்கின்றன. சர்க்கரையின் இனிப்பு சுவையைவிடவும் 250 300 மடங்கு கூடுதலான இனிப்புச் சுவை இந்த இலைகளில் உள்ளது.