பெரு நாட்டில் பிறந்தேன்...
1. உருளைக்கிழங்கு, உணவுப் பொருள் என்று 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கண்டறிப்பட்டது. தென் அமெரிக்கக் கண்டத்தில், தற்போதைய பெரு (peru) நாட்டிற்கும், பொலிவியா (Bolivia) நாட்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் வசித்த மக்கள் இதனை முதன்முதலில் பயிரிடத் தொடங்கினார்கள். ஐரோப்பியர்கள் அமெரிக்கப் பகுதிகளில் குடியேறியபோதுதான் அவர்களுக்கு உருளைக் கிழங்கு அறிமுகமானது. ஐநூறு ஆண்டுகளில் ஐரோப்பாவின் முக்கிய உணவாக மாறிவிட்டது.2. உருளைக்கிழங்கில் 78% தண்ணீரும், 18% ஸ்டார்ச் (Starch - பசை) வடிவிலான கார்போஹைட்ரேட்டும் (Carbohydrate) இருக்கிறது. 3. உலகில், அதிகம் உற்பத்தி ஆகும் பயிர்களில் நெல், கோதுமை, சோளம் ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. உருளைக்கிழங்கு நான்காம் இடத்தில் உள்ளது.4. உருளைக்கிழங்கை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடுகளில் முதல் இடத்தில் இருப்பது சீனா. இந்தியா இரண்டாம் இடம்.