மூளைக்கு வேலை: நம்பரை மறந்துவிட்டேன்!
நான் என்னுடைய நான்கு இலக்க ஏ.டி.எம். ரகசிய எண்ணை மறந்துவிட்டேன்.ஆனால், ஒரேயொரு விஷயம் தான் நினைவில் இருக்கிறது. ரகசிய எண்ணின் நான்கு இலக்கங்களும் வெவ்வேறானவை.அதுமட்டுமல்லாமல், ஆறு முறை தவறான ரகசிய எண்ணைப் பதிவிட்டால் என்னுடைய அக்கவுண்ட் முடங்கிவிடும்!ஏற்கெனவே ஐந்து முறை முயன்றுவிட்டேன். என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. என் முயற்சிகள் மூலம் சில குறிப்புகள் கிடைத்துள்ளன.அவற்றை வைத்து உங்களால் ரகசிய எண்ணைக் கண்டுபிடிக்க முடிகிறதா பாருங்கள்!விடை: 6347விளக்கம்:ரகசிய எண்ணின் நான்கு இலக்கங்களும் வெவ்வேறானவை என்று நமக்குத் தெரியும். அதன்மூலம் விடையை இப்படிக் கண்டறியலாம்.மொத்த வாய்ப்புள்ள இலக்கங்கள்: 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9.மூன்றாவது குறிப்புப்படி, 5, 8, 9, 0 ஆகிய இலக்கங்கள் ரகசிய எண்ணில் வர வாய்ப்பில்லை. மீதமுள்ள இலக்கங்களே (1, 2, 3, 4, 6, 7) சாத்தியம்.குறிப்பு 2 படி, மூன்று இலக்கங்கள் சரியானவை. 5 வராது என்பதால், 3, 4, 6 ஆகிய இலக்கங்கள் வரும். அவை சரியான இடத்தில் இல்லை.குறிப்பு 5 படி, 4, 6 ஆகிய இலக்கங்கள் சரியானதாகவும், சரியான இடத்திலும் இருப்பதை அறியலாம்.குறிப்பு 4 படி, 3 சரியான இலக்கமாகவும், சரியான இடத்திலும் அமைந்திருப்பதைப் புரிந்துகொள்ளலாம்.இப்போது கடைசி இலக்கம் மட்டுமே கண்டுபிடிக்க வேண்டும். மேற்கண்ட குறிப்புகள் வாயிலாக 1, 2 ஆகிய இலக்கம் வர வாய்ப்பில்லை. இலக்கம் 7 மட்டுமே சாத்தியம்!எனவே, நான்கு இலக்க ஏ.டி.எம். ரகசிய எண் '6347' ஆகும்.