உள்ளூர் செய்திகள்

மணப்பெண்ணும் மரக்கன்றுகளும்

அடேர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா. சமூக சேவைகளில் ஈடுபட்டுப் பாராட்டுப் பெற்றவர். இவருக்கு, உலக புவி நாளான ஏப்ரல் 22 அன்று ராணுவ வீரர் ரவி சவுகானுடன் திருமணம் நடந்தது. புகுந்த வீட்டாரிடம் 10 ஆயிரம் மரக்கன்றுகளைப் பரிசாகக் கேட்டிருந்தார் பிரியங்கா. அதில், 5,000 மரக்கன்றுகளை, தான் பிறந்த கிராமத்திலும்; 5,000 மரக்கன்றுகளை, புகுந்த வீடுள்ள கிராமத்திலும் சமூக சேவகர்கள் மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர் மூலம் நடச் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !