விளையாட வாங்க
பயிற்றுவிக்கப்பட்ட நாய்களோடு விளையாடுவதன் மூலம், மனிதர்கள் மன அழுத்தத்திலிருந்து வெளியேறி, இயல்பாக வாழ வழி செய்யும் பயிற்சிகளை சிங்கப்பூரைச் சேர்ந்த பாசிபிலிட்டி(Pawsibility) நிறுவனம் அளித்து வருகிறது. போதைப் பொருட்களுக்கு அடிமையாகி சிகிச்சை பெறுவோர், அதீத உணர்ச்சி வசப்படுபவர்கள், விவாகரத்து, விபத்து போன்றவற்றில் பாதிக்கப்பட்டு மன அழுத்தத்திற்கு ஆளானோர் போன்றவர்களுக்கு இந்தச் சிகிச்சை நல்ல பலன் அளிப்பதாக இந்நிறுவனம் தெரிவிக்கிறது. சிறப்புக் குழந்தைகள் தங்கிப் படிக்கும் விடுதிகள், பள்ளிகள் போன்ற இடங்களிலும் இந்நிறுவனம் தங்கள் சேவைகளை வழங்குகிறது.